Asianet News TamilAsianet News Tamil

TNPSC Group 4 : 7000 இடங்களுக்கு 21 லட்சம் பேர் போட்டி.. நேற்று மட்டும் 4 லட்சம் பேர் விண்ணப்பம்..

TNPSC Group 4 :தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர்.இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிக அதிகம் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 4 லட்சம் பேர் வரையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

TNPSC  group 4 Exam 2022 Current Updates
Author
Tamilnádu, First Published Apr 29, 2022, 10:47 AM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிக அதிகம் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 4 லட்சம் பேர் வரையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழக்த்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிறகு தற்போது குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுகள் ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட்,  இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மேலும் 7,100 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. 

இந்த தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. நேற்று தான் கடைசி நாள் என்பதால், அன்று மட்டும் சுமார் 4 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பத்துள்ளனர். இதனமொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 5,100 குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அந்தவகையில் 7,301 பணியிடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 290 நபர்கள் போட்டியிடுகின்றனர்.குரூப்-4 தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.கொரொனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப்-4 தேர்வு நடத்தப்படவில்லை இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios