Whom you block rubella - vaccine for children forced micils cast. The students go to schools with a cast. You do not need the permission of their parents according to the government.
யார் தடுத்தாலும், ரூபெல்லா – மீசில்ஸ் தடுப்பூசி சிறுவர்களுக்கு கட்டாயம் போடப்படும். இதற்காக பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு போடப்படும். அவர்களது பெற்றோரின் அனுமதி தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரூபெல்லா- மீசில்ஸ் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.
இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் எனவும், வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகளால், குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறினர். மேலும், இதுபோன்ற தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது எனபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக கருத்துகள் பரவின.

ஆனால் தமிழக அரசு, ரூபெல்லா – மீசில்ஸ் திட்டத்தை தொடங்கியது. இதைதொடர்ந்து சில பகுதியில் இதற்கான ஊசிகளை பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போடப்பட்டது. இதனால், ஊசி போட்ட சில நிமிடங்களில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையொட்டி பெரும் பரபரப்பு நிலவியது.
பிள்ளைகள் திடீரென வாந்தி, மயக்கத்தால் பாதிப்படைந்ததை கண்ட பெற்றோர்கள், அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். அதற்கு, உடலில் பரவும் மருந்து தனது பணியை செய்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. யாரும் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும், இந்த திட்டம் இன்றுடன் முடிவடைவதாக அரசு, ஏற்கனவே தெரிவித்து இருந்தது. ஆனால், திடீரென இந்த திட்டத்தை 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக அரசு அறிவித்தது.

இதைதொடர்ந்து, சில தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு, மாணவர்களின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும், பெற்றோரின் அனுமதி அவசியமே இல்லை. பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ரூ.1000 மதிப்பிலான தடுப்பூசியை, மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில், இலவசமாக வழங்கப்படுகிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம். தட்டம்மை, ரூபெல்லா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கத்தை தடுப்பதற்காகவே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
9 மாத கைக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை இந்த ஊசியை போட்டு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் சுமார் 85 லட்சம் பேருக்கு, ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
