Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது ஏன்? அதிர்ச்சி தகவல் !!!

TN govt bused met accdents
TN govt bused met accdents
Author
First Published Jul 15, 2017, 6:31 PM IST


தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகி வருவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் தான் முக்கிய காரணம் என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1 வாரத்தில் அரசு பேருந்துகள் மோதி தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சி மாவட்டத்தில் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர்

தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவதற்கு ஓட்டுனர்களுக்கு தூக்கம் இல்லை என்பது தான் உண்மை. வெகு தொலைவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை தலை நகரங்களுக்கு ஓட்டி வரும் ஓட்டுனர்கள் வந்த உடன் 1மணி நேரத்தில் மீண்டும் செல்லும்படி உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் 7மணி நேரத்திற்கும் மேல் பேருந்துகளை ஓட்டிவரும் ஓட்டுனர்களுக்கு முறையான உரக்கம் இல்லை என்று தான் கூறவேண்டும். ஓட்டுனர்களுக்கு குறைந்த பட்சம் 3 மணிநேரம் ஓய்வு வேண்டும் என்பது தான் உண்மை.

ஆனால் அதிகாரிகள் ஓட்டுனர்களுக்கு சற்றும் ஓய்வு கொடுக்காமல் பேருந்தை இயக்க கோருவதால் தான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து டிப்போக்களில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இதைத்தான் கூறுகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios