TN Governor to take part in Yoga Day function

உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சிறப்பு யாகா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் யோகா தினம் கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா சபைக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. அதை ஏற்ற ஐ.நா ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாளன்று உலக யோகா தினம் கொண்டாட அனுமதி வழங்கியது. 
அதன்படி இன்று ஐ.நா அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளிலும் இன்று உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்
இதே போனறு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா மையத்தில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகேஷ் சர்மா, ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோருடன் சுமார் 5 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பங்கேற்று யோகாசனம் மேற்கொண்டனர்.