TN Budget 2022 :தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 14% அளவுக்கு வளர்ச்சிஅடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.90ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 14% அளவுக்கு வளர்ச்சிஅடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.90ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து பேசியதாவது:

  • 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 14 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணக்கிப்பட்டுள்ளது. இது 2023-24ம் ஆண்டிலும் 14 சதவீதமகாவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23ம் ஆண்டில் தமிழக அரசுக்கு வரவினம் என்பது ரூ.2 லட்சத்து 31ஆயிரத்து 407 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22 திருத்த பட்ஜெட்டில் ரூ.2லட்சத்து3ஆயிரத்து87ஆக இருந்தது.
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.ஒரு லட்சத்து 42 ஆயிரத்து799 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும்முறை வரும் ஜூன் மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.20ஆயிரம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும். 
  • 2022-23ம் ஆண்டில் தமிழகத்தின் வணிக வரிவருவாய் ரூ.ஒருல ட்சத்து6ஆயிரத்து 765 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.15,537.24 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது 
  • 2022-23ம் நிதியாண்டில் மத்திய வரிகளில் மாநில அரசுக்கான பங்கு என்பது, ரூ.33,311.40 கோடியாக இருக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது. 
  • 2022-23ம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மற்றும் மானியங்கள் வகையில் தமிழக அரசுக்கு ரூ.39,758.97கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு ஊதியச் செலவினம் வரும் 2022-23ம் நிதியாண்டில் ரூ.71,566.81 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருத்த பட்ஜெட்டைவிட, 13 சதவீதம் அதிகரித்துள்ளது
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ஊதியம் அல்லாத செலவுகள், பராமரிப்பு ஆகியவற்றுக்காக ரூ.14,797.86கோடி செலவிட வேண்டியதிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்காலப் பலன்களை வழங்குவதற்காக 2022-23ம் நிதியாண்டில், ரூ.36,035.83 கோடி செலவிட வேண்டியதிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2022-23ம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.55,272 கோடியாக இருந்தது. 
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை அளவு 3.63 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 15-வது நிதிக்குழுவின் பரிந்துரை அளவுக்குள்தான் இருக்கிறது.
  • 2022-23ம் ஆண்டில் தமிழக அரசு ரூ.90,116.23 கோடி நிகர கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.6.53 லட்சம்கோடியாக அதிகரிக்கும். 2022-23ம் ஆண்டின் மாநில மொத்த உற்பத்தியில் கடன் அளவு 26.29 சதவீதமாகும்.
  • மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.2,31,407.28 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.2,84,188.45 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பழனிவேல் ராஜன் தெரிவி்த்தார்