திருப்பத்தூர் சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி கூறியிருக்கும் இரங்கல் செய்தியை பிரதமர் அலுலவகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் பலர் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், "நிவாரணத் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்" என்றும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
திருப்பத்தூர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் வேன், திடீரென பஞ்சரானது. அப்போது வேன் ஓட்டுநர் சாலையிலேயே வேனை நிறுத்தி பஞ்சர் போட்டுக்கொண்டிருந்தார்.
தூங்கும்போது இதை எல்லாம் பக்கத்தில் வைச்சுக்காதீங்க! துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்!
அப்போது வேனில் இருந்த பலர் கீழே இறங்கி நெடுஞ்சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்போது, வேகமாக வந்த மினி லாரி வேன்மீது மோதி, சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தவர்கள் மீது பாய்ந்தது இந்தக் கோர விபத்தில் சாலையில் உட்கார்ந்திருந்த பெண்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர மேல்சிகிச்சைக்காக வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார் பலியான 7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறையில் 3 மணிநேரம் மட்டுமே தூங்கிய சந்திரபாபு நாயுடு! என்னென்ன செய்தார் தெரியுமா?