விருதுநகர்
 
திருமங்கலம் முதல் இராசபாளையம் வழியாக செங்கோட்டை வரை நான்கு வழி சாலை அமையவிருக்கும் இடங்களை எம்.எல்.ஏ. தங்க பாண்டியன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும், முதுகுடி வரையிலும் நான்கு வழிச்சாலை அமையவுள்ளதால் இராசபாளையத்தை அடுத்துள்ள கிராமப்புற பகுதி அதிகளவில் பயன்பெற உள்ளனர். இதுகுறித்து மதுரை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பேசி முதுகுடியில் இருந்து மீனாட்சிபுரம், புனல்வேலி, புத்தூர், சொக்கநாதன்புத்தூர் வழியாக சிவகிரி வரையிலான சாலையை இணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். 

இந்த ஆய்வில் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கனகராஜ், நவமணி, வேல் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.