Three pound jewelry flush from a woman walking on the road The mystery of the people ...

கரூர்

கரூரில் சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து மூன்று பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு அண்ணாசாலையைச் சேர்ந்தவர் முருகேஷ் மனைவி ரேவதி (53). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் சாலையில் முன்னாடி சென்றுக் கொண்டிருந்த ரேவதி கழுத்தில் கிடந்த மூன்று பவுன் நகையைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிவிட்டனர்.

மர்ம நபர்கள் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டதால் என்னசெய்வது என்று தெரியாமல் அங்கேயே அழுது கொண்டே நின்றுள்ளார் ரேவதி. பின்னர், நடந்ததை தனது கணவனிடம் சொல்ல இருவரும் வெங்கமேடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.