Three people who attempted to cross the railway track near Kodambakkam railway station were killed in the accident.
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, மனோஜ், பிரசாந்த். இவர்கள் நேற்று இரவு மது அருந்திவிட்டு குடிபோதையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
