Three Colleges in Ariyalur constituency - thaamarai Rajendran urges in Assembly

அரியலூர் 

அரியலூர் தொகுதியில் வேளாண் கல்லூரியும், மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என்று சட்டசபையில் தாமரை ராஜேந்திரன் வலியுறுத்தி பேசினார்.

நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் தாமரை ராஜேந்திரன் தனது தொகுதியான அரியலூருக்காக பேசினார். அதில், பின்வரும் கோரிக்கைகளை வைத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரினா.

"அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வைப்பூர் - தூத்தூர் கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றில் அணைக்கட்டு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரியலூர் நகரில் புறவழிச்சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தினை கையகப்படுத்தி அந்த இடத்தில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திட வேண்டும்.

செயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடிப்படைவசதிகள் செய்துதரவும், விவசாயிகளுக்கு விற்பனை பொட்களுக்கான தொகையினை உரிய நேரத்தில் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

அரியலூர் மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரியும், மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும். 

விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை 24 மணி நேரமும் செயல்படுகின்ற வகையில் அமைத்திட வேண்டும்.

அரியலூர் தொகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். 

மருதையாற்றில் பாசனத்திற்காக தடுப்பணைகள் அமைத்திடவேண்டும்" என்று அவர் கூறினார்.