Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களை முதுகெலும்பில்லாத இனமாக்குகிறார்கள் இந்த பொறுக்கிகள்… சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு…இவரு யார பொறுக்கினு திட்டுறாரு?

this leader used abusive word on Tamil cinemas
this leader used abusive word on Tamil cinemas
Author
First Published May 29, 2018, 10:38 AM IST


பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, சமீபத்தில் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த டிவிட்டர் பதிவில் அவர் “தமிழ்நாடு ஒரு காலத்தில் சோழர்கள், பாண்டியர்கள், போன்ற வீரம் செறிந்தோரின் மண்ணாக இருந்தது.

என்னுடைய முன்னோரான ”ராஜப்பா ஐயர்”  திருமலை நாயக்கர் அரசவையில் மந்திரியாகவும், தளபதியாகவும் இருந்திருக்கிறார். அதன் பிறகு வந்த பிரிட்டிஷ் அரசாங்கம், நம் தமிழ் மக்களை சாதாரண குமாஸ்தாவாக மாற்றி வைத்தது. இன்று சினிமா தமிழர்களை முதுகெலும்பு இல்லாதவர்களாக மாற்றி வருகிறது. இந்த பதிவை நான் அந்த பொறுக்கிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்” என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Tamil Nadu was once a land of warriors such as Cholas, Pandyans etc.. My ancestor Rajappa Iyer was PM and Commander in Chief of Tirumala Nayaka kingdom. British brainwashed the Tamils to become clerks and now cinema has made us Tamils spineless submitting to porkis

— Subramanian Swamy (@Swamy39) May 28, 2018

எதற்கு இவர் இப்போது திடீரென சினிமாவை சாடுகிறார்? என்ற கேள்விக்கு, நேற்று காலா திரைப்படத்தின் டிரைலர் தமிழில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் அதன் எமோஜி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாகியிருக்கிறது.

காலா அரசியல் பேசும் படமாக இருப்பதால், சுப்பிரமணிய சுவாமி திடீரென இப்போது சினிமாவை தாக்கி பேசியிருப்பது, காலா படத்தை மறைமுகமாக தாக்குவதற்கு தான். என சிலர்  கூறிவருகின்றனர். ஆனால் அவர் அந்த பதிவில் காலா படம் பற்றி குறிப்பிடாததால், இது ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் சாடுவது போன்ற பதிவாகவே தெரிகிறது. எது எப்படியோ இந்த பொறுக்கிங்கிற வார்த்தை மட்டும் கொஞ்சம் டூ மச் தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios