திண்டுக்கல்லில் கோயில் உண்டியல்களை திருடிய சிறுவன் உள்பட மூவரை காவலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தத்தில் அதில் வெறும் ரூ.500 மட்டுமே இருந்ததால் மன உலைச்சல் அடைந்தோம் என்று தெரிவித்தனர்.  

dindigul க்கான பட முடிவு

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு என்னும் ஊரில் புகழ்பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்துச் சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி ஆடிப்பூரத்தன்று பூசைகள் முடிந்தபின்னர், அலுவலர்கள் கோயிலைப் பூட்டினர்.

மறுநாள் காலை (அதாவது 14-ஆம் தேதி) கோயிலை திறந்தபோது அங்கிருந்த மூன்று உண்டியல்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, இளஞ்செழியன் மற்றும் காவலாளர்கள் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். 

தாடிகொம்பு பெருமாள் கோவிலில் உண்டியல் திருட்டு க்கான பட முடிவு

இந்நிலையில் காணாமல்போன மூன்று உண்டியல்களும் தாடிக்கொம்பு அருகேவுள்ள குளத்தில் இருந்த பள்ளத்தில் கிடந்தது. பணத்தை எடுத்துவிட்டு உண்டியல் மட்டுமே அங்கு கிடந்தது. கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில், "மூன்று நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு உண்டியல்களை தூக்கிச் செல்வது" பதிவாகியிருந்தது.

கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய தனிப்படை காவலாளர்கள் கோயில் உண்டியல்களை திருடியவர்களைக் கண்டுபிடித்தனர். அதன்படி, இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட மூவரை கைது செய்தனர். இவர்களுக்கு தலைமைத் தாங்கியது ராஜபாண்டி என்பவர். 

கோவிலில் உண்டியல் திருட்டு க்கான பட முடிவு

இவர்களிடம் காவலாளர்கள் விசாரித்தபோது, "அந்த மூன்று உண்டியல்களிலும் சேர்த்து மொத்தமே ரூ.500 மட்டுமே இருந்தது" என்று தெரிவித்துள்ளனர். கடந்த 7-ஆம் தேதியே மூன்று உண்டியல்களும் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. இது தெரியாமல் மூன்று உண்டியல்களையும் கஷ்டப்பட்டு திருடி வெறும் 500 ரூபாய் இருந்ததால் மன உலைச்சல் அடைந்து அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளனர் இந்த திருடர்கள்.

arrest க்கான பட முடிவு