Asianet News TamilAsianet News Tamil

கூலியை உயர்த்தி தர வேண்டும்.. திருப்பூரில் மாபெரும் போராட்டம்..

திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

They are engaged in a struggle as they go on strike condemning the non payment of wage increases
Author
Tamilnadu, First Published Jan 24, 2022, 1:43 PM IST

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகளும், 20,000 ரிப்பன் இல்லாத விசையாழிகளும் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. கட்டா துணி உற்பத்தித் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்

They are engaged in a struggle as they go on strike condemning the non payment of wage increases

திருப்பூர், கோவை மாவட்டங்களில், விவசாய தொழிலுக்கு அடுத்த நிலையில் விசைத்தறி தொழில் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறியாளர்கள் தவித்து வரும் நிலையில், கூலி உயர்வை அமல்படுத்த கோரி அமைச்சர்கள், ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும், அதை நடைமுறைப்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள்  காலம் தாழ்த்தி வருகின்றனர். இதன் காரணமாக விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

They are engaged in a struggle as they go on strike condemning the non payment of wage increases

தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தை, தோல்வியடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் அரசு அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்த கோரியும், இரண்டு லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை காக்க கோரியும், 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டித்தும் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று காரணம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios