திருவாரூர் அருகே ஏறுந்த வாடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே,ஏறுந்த வாடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் ஆவார்.

இவர் நேற்று தனது குடும்பத்துடன் பக்கத்து ஊரில் உள்ள உறவினரின் விசேஷத்திற்கு சென்று விட்டு  இன்று காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.