Asianet News TamilAsianet News Tamil

அமலாக்கத்துறை அதிகாரியின் லேப்டாப்பில் 75 பேரின் பட்டியல் சிக்கியது- நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவல்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தகவல்.
 

The Tamil Nadu government has said that the list of 75 bribery cases has been found in the laptop of the enforcement officer KAK
Author
First Published Dec 19, 2023, 1:29 PM IST

அமலாக்கத்துறை அதிகாரி கைது

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை அதிகாரி, அங்கீத் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கீத் திவாரியிடம் லஞ்ச் ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.  இந்தநிலையில்  தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு என்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும். மேலும் அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில் தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன்  பட்டியலிட்டுள்ளார். இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

The Tamil Nadu government has said that the list of 75 bribery cases has been found in the laptop of the enforcement officer KAK

லேப்டாப்பில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக அங்கித்திவாரியே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.  20லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட  வேண்டி உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரில் அங்கித் திவாரி பணம் பெறும் போது அவருடைய குரல்பதிவு மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உண்மையா என்பதை கண்டறிய அவருடைய குரலை பதிவு செய்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கித்திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தார். 

அங்கித் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். திவாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை அவர் மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது விசாரணையை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

The Tamil Nadu government has said that the list of 75 bribery cases has been found in the laptop of the enforcement officer KAK

ஜாமின் - நாளை தீர்ப்பு

அங்கித் திவாரி தரப்பில் மூத்த  வழக்கறிஞர் ஆஜராகி,அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை. அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒன்றிய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்.எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து இரண்டு தரப்பு வாதங்களை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

போலியான சித்தாந்தம் இன்று சீட்டு கட்டு போல் சரிகிறது... ஊழல் வழக்கில் மற்றொரு அமைச்சருக்கு தண்டனை- அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios