Asianet News TamilAsianet News Tamil

சரியாக சம்பளம் தராததால்.. தற்கொலை செய்துகொண்ட புகைப்படக்காரர்.. சென்னையில் பரபரப்பு சம்பவம் !!

யு.என்.ஐ  செய்தி நிறுவனத்தின் சென்னை பிரிவு தலைமை நிர்வாகி குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

The suicide of Kumar, the chief executive of the Chennai division of the UNI news agency, has caused a stir
Author
Chennai, First Published Feb 14, 2022, 11:31 AM IST

யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில், 25 ஆண்டுக்கும் மேலாக புகைப்படக் கலைஞராக பணியாற்றி தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவர் குமார். யு.என்.ஜ செய்தி நிறுவனம் நாடு முழுவதும் பணியாற்றும் அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. 

முறையாக சம்பளம் தராததால்,  மன அழுத்தத்திற்க்கு ஆளான குமார், நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து பேசிய சிலர், தற்கொலை செய்து கொண்ட திரு. குமார் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு அவரது குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். 

The suicide of Kumar, the chief executive of the Chennai division of the UNI news agency, has caused a stir

அத்துடன் அச்சு, காட்சி ஊடக நிறுவனங்கள் அவர்களது பணியாளர்களுக்கு சரியான ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்பதோடு மீறுகின்ற ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios