இறந்த தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன் தள்ளி வந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கண்ணன், விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு அருண்குமார், அஜித்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடன் கண்ணனின் தாய் புவனேஸ்வரி. வயது 85 தங்கி இருந்தார்.

வயதான புவனேஸ்வரி வீட்டில் தங்கி இருந்தது அக்கம் பக்கத்தில் வீட்டில் வசித்தவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் வயதான புவனேஸ்வரியை அடிக்கடி திட்டியிருக்கிறார்கள்.

மேலும் வெளிநாட்டில் தங்கி உள்ள வீட்டின் உரிமையாளரிடமும் அடிக்கடி புகார் செய்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ௧௧ ரூபாயாக இருந்த வீட்டு வாடகையை அதிகமாக்கியிருக்கிரார்கள்..

இந்த நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு அருண்குமார் தான் காதலித்த பெண்ணுடன் யாருக்கும் தெரியம் ஓடிவிட்டாராம். இதுவரை அருண்குமார் எங்கு இருக்கிறார்கள் என தெரிய வில்லை. இதனால் அருண்குமாரின் வருமானத்தை நம்பி இருந்த அவரது குடும்பம் வறுமையில் தள்ளாடியது. இவர்களால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழல் உருவானது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஏளனம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே புவனேஸ்வரிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.  இது பற்றி ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் சொன்னார்களாம் ஆனால் அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லையாம்.  இதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த புவனேஸ்வரி திடீரென இறந்தார். இதுபற்றி அவர் உறவினர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் யாரும் வரவில்லையாம்.

தாய் இறந்தது பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தால் அவர்கள் கூடுதலாக வேறு ஏதேனும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று கண்ணன் நினைத்தார். இதையடுத்து தாய் புவனேஸ்வரி உடலை பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முடிவு செய்தார்.

நேற்று இரவு முழுவதும் தாயின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. அப்போது கண்ணன், அவரது மனைவி சாந்தி, மகன் அஜித்குமார் மட்டும் வீட்டில் இருந்தனர்.

நேற்று அதிகாலை இறந்த புவனேஸ்வரியின் உடலை மோட்டார் சைக்கிளில் படுக்க வைத்தபடி விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானத்துக்கு கண்ணன் தள்ளிச் சென்றுள்ளார். உடல் கீழே விழாமல் பிடிப்பதற்காக மனைவியும் உடன் நடந்து அழைத்து சென்றுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவில்லை. இதற்கிடையே மின்மயானம் வழியாக சென்ற போது அதை பொது மக்கள் மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து வரப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப வறுமை மற்றும் உறவினர்கள் கைவிட்டதால் தாய் புவனேஸ்வரி உடலை மின் மயானத்துக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததாக கண்ணன் கண்ணீருடன் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து புவனேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கண்ணன், அவரது மனைவி சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன் தள்ளி வந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.