20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஒப்பந்தக்கூலி, தினக்கூலி, மதிப்பூதியம் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

100 சதவீத அரசு ஊழியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்கு வராததால் பணிகள் முடங்கியுள்ளன. அரசின் இயந்திரமாக கருதப்படும் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். 

இதற்கிடையே எதிர்வரும் 27,28 ஆகிய தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டங்களும், மே 2 ஆம் தேதி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.