The Real face of Nithyananda Assistant girl who spoke about Vairamuthu on andal Issue

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டாளை பற்றி தவறாக பேசிவிட்டதாக மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியவர் கவிப்பேரரசு வைரமுத்து . இதற்கிடையில் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார் இந்நிலையில் கடந்த சில நாட்களாக வைரமுத்துவை பற்றி நித்யானந்தா சிஷ்யை நந்திதா ஜனநார்தன் வைரமுத்துவை தகாத வார்த்தைகளில் திட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக போட்டுள்ளார். மிக கொச்சை வார்த்தைகளுடன் பேசியது வீடியோ பதிவாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைரமுத்து பேசிய மறுகணமே ‘வேசி மகன், உங்க அம்மா வேசி, தலையை வெட்டணும்’ இப்படி எல்லாம் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராகப் பண்பாடோடு பேசுபவர்கள் மற்ற எல்லா ஜாதிக்கார்களையும் ரவுடிகளாகப் பொறுக்கிகளாகச் சித்திரிக்கிற பார்ப்பனர்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பேசுகிறார்கள். இப்படிக் கெட்ட வார்த்தைகளோடு ‘இந்து’ என்கிற பெயரில் வெகுண்டெழுகிறார்கள், பதிலுக்கு வைரமுத்து யாரும் ஆதரவாக வரவில்லை.

வைரமுத்து சொன்ன அடுத்த நொடியே ஆண்டாள் பற்றிய வரலாறு வெளிவந்துவிட்டது. ஆண்டாள் யார்? அது பக்தி வரலாறா? இல்லை பக்தி இலக்கியமா? ஆண்டாள் மார்கழி திங்கள் பற்றி மட்டும் பாடியிருக்கிறாரா? இல்லை தன்னை ஆணாக மாற்றி கிருஷ்ணனை பெண்ணாக மாற்றி காமம் பாடியிருக்கிராரா? என்பதையெல்லாம் அது பேச வைத்துவிட்டது. இது அவர்களின் பிழைப்பிற்கு விடப்பட்ட சவால். அதான் இன்று வீதியில் நிற்கிறார்கள்.

முருகன் விநாயகரின் தம்பி, சிவனின் மகன் எனில் ஏன் விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது? தைப்பூசம் ஏன் தமிழர்கள் இருக்கும் பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகிறது என நீங்கள் கேட்கபோவதில்லை. இந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்கள் பொய் கட்டுமானங்களை உருவாகி இருக்கிறார்கள். இந்து என இவர்கள் சொல்லும் நல்லவை எல்லாமே பெளத்தம், சமணத்தில் இருந்து திருடப்பட்டவை. மற்றவை எல்லாமே பிராமணியம் என உளறும் மனுக்களுக்கு சொந்தமனாது. 1850களில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட இரண்டு மதங்கள். ஒன்று பெளத்தம் இன்னொன்று பிராமணியம்… ? இதில் எங்கே இந்து ? 1850க்குள் 2017 எத்தனை தூரங்கள்.. அந்த தூரங்களில் அவர்கள் ஒட்டுமொத்த மக்களை வீழ்த்தியிருக்கிறார்கள்..? அவர்கள் பொய்யர்கள்.. அவர்கள் கையில் இருக்கும் மனுதர்மம் முதல் ஆண்டாள் வரை எல்லாமே பொய்களே. தன்னை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தும் வர்ணாசிரம முயற்சிகளே.

வைரமுத்து மீது பெரிய மரியாதை இல்லாதபோதும் ஆண்டாளுக்காகப் பேசுவதாய் அநாகரிகமும் ஆணவமும் ஆபாசமும் கொப்பளிக்கப் பேசிய அந்தப்பெண்ணை சிறுமி என்று கடந்து போய்விடமுடியவில்லை. இது ஓர் அபாய வருங்காலத்துக்கான அறிகுறி.

மற்ற மத சண்டை மூட்டி குளிர் காய முடியாமல் இந்துக்களுக்குள்ளேயே ஒரு சண்டை உருவாக்கும் குயுக்தி. ஆண்டாள் மீது பக்தியோ மரியாதையோ அவள் கவிதையின் மீது ரசனையோ இல்லாத கூட்டம் ஒரு தீவிர கலக விளைவிற்காக பாசாங்கு பக்தியோடும் பொய்யான தன்மான ஒப்பனையுடனும் கிளம்பியிருக்கிறது. இது பல இளைஞர்களின் ரகசிய குரலாக இருப்பதே இதன் பேராபத்து. அவள் நித்தி சிஷ்யை என்பதை மீறி அடுத்த தலைமுறையின் அரைவேக்காட்டு புரிதல் இதில் எச்சரிக்கை மணி அடிக்கிறது.

பார்ப்பதற்கு நவநாகரிக பெண் போலவும் ,சதா பகவானின் பெருமைகளை பேசக்கூடிய ஒரு பார்ப்பன பெண்மணி, இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது தலித்கள் பெயரை குறிப்பிட்டு வன்மத்தோடு திட்டுகிறார். என்னடா இது பார்க்க Ultra modern யுவதிகளாக இருக்கிற இந்த பெண்கள் கூடவா இப்படி வெளிப்படையாக சாதிய வன்மத்தை கக்குவார்கள் என பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பார்ப்பனிய கூறுகள் தெரிந்தவர்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். என இப்படி ஒரு பதிவு வலைதளங்களில் உலாவருகிறது.