வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் நாளை முதல் 14 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

அதன் படி, சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள்ளதாகவும், தென் தமிழகத்தில் கன மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ள்ளது

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 8  செமீ மழையும், நெய்வேலியில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.