ஓ.பி.எஸ்-க்கு துணை முதலமைச்சராக பிரமாணம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் இளங்கோ என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்ததை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

வழக்கறிஞர் இளங்கோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, பதவி பிரமாணம் செய்து வைக்க அதிகாரம் இல்லை என்றார். எனவே துணை முதலமைச்சர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.