மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆத்மா, என்னைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கு. அது என்னன்னு இப்ப சொல்லமாட்டேன் என்றும் நேரம் வரும்போது சொல்வேன் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

பாஜக பிரமுகர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரிடம், வார பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்தது. அந்த பேட்டியின்போது, உங்களது அரசியல் வாழ்வில், நீங்கள் நினைத்ததை எல்லாம் அடைந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியது. 

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், கடவுள் எனக்கு என்ன கொடுக்கணுமோ அந்த அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார். இறந்துபோன என் அப்பாவின் ஆத்மாவிடம் தொடர்பில்தான் இருக்கேன். அவருடைய ஆத்மா என்கிட்ட இன்னமும் பேசிக்கிட்டுதான் இருக்கு. 

ஒரு முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆத்மாவே கூட என்னைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கு. ஆனா, அது என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்வேன்.

எனக்கு முனிவர்கள் சித்தர்கள் ஆசிகளும் உண்டு. நானும் பாதி ரஜினிகாந்த்தான். வாழ்க்கையில் எது நிம்மதியோ, எது சந்தோஷமோ, அது எனக்கு கிடைச்சிட்டுதான் இருக்கு.

அதனால எதையும் நான் தேடிப்போக வேண்டியதில்லை என்று பேட்டியின்போது எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.