The Karur Taluk office decided to conduct the strike before investors Why

கரூர்

தனியார் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை திரும்பத் தர வேண்டும் என்று வலியுறுத்தி முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.

பிஏசில் என்ற தனியார் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை திரும்ப தராமல் உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த முதலீட்டு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்ப் போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை.

அதனால், களப் பணியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பணம் திரும்ப பெறுவதற்காக அமைப்பு துவக்க சிறப்புக் கூட்டம் நேற்று கரூர் சுங்ககேட் சிஐடியூ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆரோக்கிய செல்வம் தலைமை தாங்கினார். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி விளக்கவுரை ஆற்றினார். களப்பணியாளர்கள் சங்க மாநில உதவித் தலைவர் ஜோதி, ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

“இன்று கோரிக்கை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பது என்றும்

15 நாட்களுக்குப் பின்னர் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.