the fan who participated in the TV debut was removed from rajini fans club

தலைமை மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும்பொது விவாத நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் பங்கேற்க கூடாது என கூறி சைதை ரவி என்பவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டிப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையடுத்து ரஜினி ரசிகரான சைதை ரவி மன்றத்தின் அனுமதி இல்லாமல் தொலைக்காட்சி டிபேட்டில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், ரசிகர் மன்ற கட்டுப்பாட்டிற்கும்,ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சைதை ரவி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரசிகர் மன்ற கட்டுப்பாட்டிற்கும்,ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சைதை ரவி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாகவும், தலைமை மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சி & பொது விவாத நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் பங்கேற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.