கோவாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 113 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் 500-ஐ தாண்டியது. அதாவது ஒரே நாளில் 524 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 500க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பு கடந்த 4 மாத காலமாக ஏற்படாத நிலையில் தற்போது திருச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி சிந்தாமணி பகுதி பூசாரி தெருவைச் சேர்ந்த உதயகுமார் (27) என்பவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆஸ்கர் விருதை வென்ற இந்திய திரைப்படங்கள்..! மகத்தான சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருச்சியில் இளைஞர் உயிரிழப்பு
இந்தநிலையில் அந்த இளைஞர் உயிரிழந்தது எப்படி எனவும், அவருக்கு காய்ச்சல் பரவியது குறித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த இளைஞர் பெங்களூருவில் பணியாற்றி வருபவர், அவர் தன் நண்பர்களுடன் கோவா சென்று திரும்பிய போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அங்கு அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பின்பு தான் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்
மேலும் திருச்சி மாவட்டத்தில் இன்புளுயென்சா பாதிப்பு லேசான அறிகுறிகளுடன் உள்ளதாகவும், அதே நேரத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளதாக கூறினார். திருச்சி மாவட்டத்தில் இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் வீட்டுத்தனிமையில் இருப்பதாக கூறிய அவர், இருந்த போதும் மக்கள் அச்சம் அடைய தேவையில்லையென கூறினார்.
இதையும் படியுங்கள்
