Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் 2.18 லட்சம் வசூல்.. 'அதிரடி' காட்டிய... சென்னை மாநகராட்சி ! எதற்கு தெரியுமா ?

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

The Chennai Corporation has said that only one lakh was collected from the public in Chennai yesterday for violating the corona security rules
Author
Chennai, First Published Jan 4, 2022, 11:04 AM IST

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ‘தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.

The Chennai Corporation has said that only one lakh was collected from the public in Chennai yesterday for violating the corona security rules

கோவிட் கேர் மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும். விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கு தயங்காதீர்கள். அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம் முழுமையாக செயல்பட வேண்டும். 

The Chennai Corporation has said that only one lakh was collected from the public in Chennai yesterday for violating the corona security rules

தேவையான பரிசோதனை மையங்களை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 31ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 2,603 பேரிடமிடருந்து ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios