கதிராமங்கலத்தில் போரடியதால் கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டது.  

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அவர்கள் ஜாமின் வழங்க வேண்டும் என தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் ஜாமின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த தஞ்சை நீதிமன்றம் இரண்டாவது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.