Telecommunication sector pensions demonstrated on a single demand ...

இராமநாதபுரம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொலைத் தொடர்புத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொலைத் தொடர்புத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் சி.ராமமூர்த்தி, பொருளாளர் ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளநிலை தொலை தொடர்புத்துறை அலுவலர் ஆர்.ராமமூர்த்தி, பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.லோகநாதன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். 

இதில் சங்க உறுப்பினர்கள் ஆர்.அமலநாதன்,பி.ஜெயபால் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.