Tea powder sold for 1 coroe 86 lakhs Farmers are happy
நீலகிரி
நீலகிரியில் நடைப்பெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ. 1 கோடியே 86 இலட்சத்து 30 ஆயிரத்து 63-க்கு தேயிலைத் தூள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் டீசர்வ் ஏல மையத்தில் தேயிலைத் தூள் ஏலம் நடைபெற்றது.
இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 803 கிலோ தேயிலைத் தூள் ஏலத்துக்கு வந்தது.
இதில், இலை இரகம் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 389 கிலோ, டஸ்ட் ரகம் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 414 கிலோ அடங்கும். இது கடந்த வாரத்தைவிட 55 ஆயிரத்து 801 கிலோ குறைவாகும்.
1 இலட்சத்து 44 ஆயிரத்து 989 கிலோ இலை இரகம், 98 ஆயிரத்து 364 கிலோ டஸ்ட் இரகம் என மொத்தம் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 353 கிலோ தேயிலைத் தூள் விற்பனையானது.
மொத்தம் 82.27 சதவீதம் விற்பனையான இதில், சராசரி விலையாக 67.26 ரூபாய் கிடைத்தது. இந்த முறை 2 ரூபாய் விலையேற்றம் அடைந்துள்ளது. 1 கோடியே 86 இலட்சத்து 30 ஆயிரத்து 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரத்தைவிட இந்த வாரம் ரூ. 22 இலட்சத்துக்கான விற்பனை குறைந்தது. எனினும், முந்தைய ஏலங்களைவிட விற்பனை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
