தீபாவளி பண்டிகை... 602 கோடிக்கு சரக்கு விற்று சாதனை புரிந்த தமிழக அரசு...!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 8, Nov 2018, 4:26 PM IST
TASMAC sale to reach...602 crore
Highlights

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து அரசு சாதனை புரிந்துள்ளது.

தீபாவளி முன்னிட்டு கடந்த 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து அரசு சாதனை புரிந்துள்ளது.  

தமிழகம் முழுவதும் கடந்த 6-ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதலே அனைத்து டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. சனிக்கிழமை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், மது அதிகமாக விற்பனையாகும் என்று அதிகாரிகள் கருதினர். அதற்கு ஏற்றார்போல, டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது வாங்கி வைக்கப்பட்டது. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ரூ.350 முதல் ரூ.500 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால், கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.602 கோடி தமிழகம் முழுவதும் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 34.5 சதவீதம் விற்பனை அதிகமாகும். 

குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய தினங்களான சனிக்கிழமை அன்று ரூ.124 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ.150 கோடிக்கும், திங்கள் கிழமை அன்று ரூ.148 கோடிக்கும், தீபாவளி அன்று செவ்வாய்க்கிழமை ரூ.180 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த நான்கு நாட்கள் 175 கோடிக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

loader