tasmac loss in 2016

தமிழக சட்டப்பேரவையில் 2014 - 15 மற்றும் 2015 - 16 ஆம் ஆண்டுகளுக்கான டாஸ்மாக் நிறுவன அறிக்கைகள் இன்று தாக்கல்செய்யப்பட்டன.

டாஸ்மாக் நிறுவனம் 2015 - 16 ஆம் ஆண்டில் 125.64 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், 2014 - 15 ஆம் ஆண்டில் 79.13 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன.

2014 - 15 ஆம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 27,820 கோடி ரூபாயாக இருந்தது. 2015 - 16 ஆம் ஆண்டில் அந்த வருவாயானது ரூ.30,283 கோடி ரூபாயக உயர்ந்துள்ளது என்றும் டாஸ்மாக் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015 - 16 ஆம் ஆண்டில் 26,992 கோடி ரூபாய் அளவுக்கு அயல்நாட்டு மது வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், விற்பனை மற்றம் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிறுவனமாக டாஸ்மாக் உள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவன ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.