தமிழக டிஜிபி திரிபாதி இன்று திடீரென உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளார். அதில்  காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும்  இனி தமிழில்தான்  இருக்க வேண்டும் என அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் வருகைப் பதிவேட்டில் காவல்துறையினர் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்றும்  கடித பரிமாற்றம் உட்பட அனைத்து அலுவலக கோப்புகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவல் வாகனங்களின் மீது தமிழில் காவல் என எழுதப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து அலுவலக முத்திரைகளும், பெயர் பலகைகளும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என்றும்  டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் திரிபாதி தெரிவித்துள்ளார். காவல் துறையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு தமிழ் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.