தமிழக அரசு, பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டால் நாங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படுவோம் என்று எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாஜக, அதிமுகவை பிளவுபடுத்தி உள்ளது என்பது தமிழகத்தின் சாமானிய மக்களும் கூறுகின்றனர். தமிழகத்தன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமூக  நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தமிமுன் அன்சாரி, செய்தியாளர்களைச் சந்தித்தப் பிறகு, டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜகவுக்கு ஆதரவாக தமிழக தமிழக அரசு செயல்பட்டால் நாங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படுவோம் என்று தமிமுன் அன்சாரி கூறினார்.

தமிழக நலன் காக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுகவை பாதுகாக்க வேண்டும். அதிமுகவை பாதுகாப்பதால் தமிழக நலன் காக்கப்படும் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.