tamilnadu milk association challenges rajendra balaji
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.அப்போது, ஆவின் பால் மட்டுமே தரமாக தயாரிக்கபடுவதாகவும், தனியார் பாலில் ரசாயனம் கலக்கபடுவதாவும் குற்றம் சாட்டினார்.
கெட்டுப் போனால் தான் அது பால்...லாபத்திற்காக பாலில் ரசாயனம் கலக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பால் பற்றாக்குறை என்பதற்காக விஷத்தை குடிக்க முடியுமா ? பாலில் ரசாயனக் கலப்பு இல்லை என்பதை பால் நி்றுவனங்கள் நிரூபிக்க முடியுமா?

ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் பால் நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்படும்.பால் முகவர்கள் சங்கம் மீது ஏராளமான புகார் வந்த வண்ணம் உள்ளன .தனியார் பால் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்படும். இவ்வாறு கொதித்தெழுந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பகீர் குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய பொன்னுசாமி, "தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதை நிரூபித்தால் வணிகத்தை விடத் தயார். பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.
