முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கேரளா சட்டசபையில் இன்று ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியமானது என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்துக்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில் கேரளா மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக நீரை பகிர்ந்து கொள்வதில் கேரளா உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அரசு விரும்புகிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது.

மேலும் உச்சநீதி மன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும் உச்சநீதி மன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது. இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
