டோட்டலாகவே மாற்றி அடித்து ஆடும் தமிழக பாஜக! திமுகவுக்கு எதிராக ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை!

தமிழ்நாடு பாஜகவில் கிளை பொறுப்புகள் முதல் மாநிலத் தலைவர் வரை உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைகளுக்கும், 1,231 ஒன்றியத்தில் 950 ஒன்றியங்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Tamilnadu BJP new leaders appointed for 33 districts tvk

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு பாஜகவில் கிளை பொறுப்புகள் முதல் மாநிலத் தலைவர் வரை உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் கிளை பொறுப்பாளர்களை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்,  அதில்  தேர்வான கிளைப் பொறுப்பாளர்கள் மண்டலத்தைத் தேர்வு செய்வார்கள், மண்டல அளவிலான தலைவர்கள் மாவட்ட தலைவர்களைத் தேர்வு செய்வார்கள். இதுதான் பாஜக கட்சியின் உட்கட்சி தேர்தல் விதியாக உள்ளது. ஆனால், அதே சமயம் மாநிலத் தலைவரைக் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும்.

அதன்படி, தமிழக பாஜகவில் உள்ள 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைகளுக்கும், 1,231 ஒன்றியத்தில் 950 ஒன்றியங்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு தற்போது அமைப்பு தேர்தல் மூலம் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கன்னியாகுமரி கிழக்கு - கே.கோபகுமார், கன்னியாகுமரி மேற்கு - ஆர்.டி.சுரேஷ், தூத்துக்குடி வடக்கு - கே.சரவண கிருஷ்ணன், திருநெல்வேலி வடக்கு - ஏ.முத்து பழவேசம், திருநெல்வேலி தெற்கு - எஸ்.பி.தமிழ்ச்செல்வன், தென்காசி - ஆனந்தன் அய்யாசாமி, விருதுநகர் கிழக்கு - ஜி.பாண்டுரங்கன், சிவகங்கை - டி.பாண்டிதுரை, மதுரை கிழக்கு - ஏ.பி.ராஜசிம்மன், மதுரை மேற்கு - கே.சிவலிங்கம், திண்டுக்கல் கிழக்கு - டி.முத்துராமலிங்கம், தேனி - பி.ராஜபாண்டி, திருச்சி நகர் - கே.ஒண்டிமுத்து, திருச்சி புறநகர் - ஆர். அஞ்சா நெஞ்சன், புதுக்கோட்டை கிழக்கு - சி.ஜெகதீசன், அரியலூர் - ஏ.பரமேஸ்வரி, தஞ்சாவூர் வடக்கு - தங்க கென்னடி, திருவாரூர் - வி.கே.செல்வம், மயிலாடுதுறை - நாஞ்சில் ஆர்.பாலு, கடலூர் கிழக்கு - அக்னி கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மேற்கு - கே.தமிழழகன், செங்கல்பட்டு தெற்கு - எம்.பிரவீன் குமார், செங்கல்பட்டு வடக்கு - என்.ரகுராமன், காஞ்சிபுரம் - தாமரை ஜெகதீசன், திருவள்ளூர் கிழக்கு - எஸ்.சுந்தரம், கள்ளக்குறிச்சி- எம்.பாலசுந்தரம், வேலூர் - வி.தசரதன், திருப்பத்தூர் - எம்.தண்டாயுதபாணி, சேலம் நகர் - டி.வி.சசிகுமார், நாமக்கல் கிழக்கு - கே.பி.சரவணன், நாமக்கல் மேற்கு - எம்.ராஜேஷ் குமார், கோவை தெற்கு - ஆர்.சந்திரசேகர், நீலகிரி - ஏ.தர்மன் ஆகியோர் புதிய மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய மாவட்ட தலைவர்களில் தென்காசி மாவட்ட தலைவராக ஸ்ரீதர் வேம்புவின்  நெருங்கிய நண்பரான  ஆனந்தன் அய்யாசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் புதிய மாவட்ட தலைவராக தசரதன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நிர்வாகிகள் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலை திமுகவை வீழ்த்த அண்ணாமலை இப்பவே தயாராகி வருகிறார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios