கல்லூரி மாணவிகளை விவிஐபிக்களுக்கு  படுக்கைக்கு விருந்தாக்க அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளுக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைத்துள்ளார்.

மேலும் அந்த மாணவிகள் அதுகுறித்து மீண்டும் பேச வேண்டாம் என மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து சீரழிக்கும் செயலில் தள்ளுவதற்காக கேப் விடாமல் 19 நிமிடங்கள் பேசும் ஆடியோ ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது

இந்த ஆடியோவில், பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிலருடன் படுக்கையை பகிருமாறு தெரிவித்துள்ளார். மாணவிகள் மறுத்தபோது அவசரம் இல்லை, யோசித்து சொல்லுங்கள். உங்களின் நல்லதுக்காகவே சொல்கிறேன். இந்த காலத்தில் இது எல்லாம் சர்வ சாதாரணம் என்பது உங்களுக்கே தெரியும். உங்களின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் ஓசூருக்கு வந்துவிடுங்கள்.

உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்தால் உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும் என்று மாணவிகளிடம் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார். அவர் சுமார் 20 நிமிடம் மாணவிகளிடம் பேசிய பேச்சு சமூகவளைதலங்களில் தீயாக பரவியதை அடுத்து, கணித பேராசிரியை நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கணித பேராசிரியை புரோக்கராக மாறியது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.