தொகுதி மறுவரையறை திட்டத்தால் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் 7 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், கூட்டு நடவடிக்கை குழு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
Tamil Nadu ministers met with political leaders to discuss constituency realignment : மத்திய அரசு தொகுதி மறுவரையறை திட்டமிட்டிருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு கூறி வருகிறது. இதன் காரணதாக தமிழகத்ந்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 8 தொகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் வட மாநிலங்களான பீகார், உத்தரபிரதேஷம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது இருப்பதை விட கூடுதல் எம்பி தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அனைத்துக்கட்சி கூட்டம்
மக்கள் தொகையை பெரும் அளவில் கட்டுப்படுத்திய தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுக்கும் தண்டனை எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசு சார்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட 55 கட்சிகள் கலந்துகொண்டது. அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் மற்ற மாநிலங்களை உள்ள அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து கூட்டி நடவடிக்கை குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முதல்வர், அரசியல் தலைவர்களோடு சந்திப்பு
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் தொகுதி மறுவரையால் ஏற்படுகின்ற பாதிப்பு தொடர்பாக 7 மாநில முதலவர்கள், அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க அழைப்பு விடுத்திருந்தார். மேலும் வருகிற 22ஆம் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர் மற்றும் எம்பிக்கள் பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

மார்ச் 22 கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
நேற்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில் அவர் அழைப்பை ஏற்றார். இதனை தொடர்ந்து இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை அமைச்சர் பொன்முடி சந்தித்து அழைப்பு விடுத்தார். இதே போல தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ்-க்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எவ வேலு நேரில் அழைப்பு விடுத்தார். .
