Asianet News TamilAsianet News Tamil

உள்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ்க்கு புதிய பொறுப்பு- ஸ்டாலின் அதிரடி

தமிழகத்தில் தொடர் கொலைகள், கள்ளச்சாராய மரணம் என அடுத்தடுத்து புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
 

Tamil Nadu Govt order giving additional responsibility to Amutha IAS KAK
Author
First Published Jul 19, 2024, 3:25 PM IST | Last Updated Jul 19, 2024, 3:25 PM IST

யார் இந்த அமுதா ஐஏஎஸ்

துணிச்சல் மற்றும் சுறு,சுறுப்பான அதிகாரி என பெயர் எடுத்தவர் அமுதா ஐஏஎஸ், தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகளில் அமுதாவும் ஒருவர், மழை , வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் களத்தில் இறங்கி சுறு,சுறுப்பாக பணியாற்றுபவர், மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடல் அடக்கம் நிகழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளார்.கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் போது மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி சென்றிருந்தார். அங்கு பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு மத்திய அரசிடம் பேசி அமுதா ஐஏஎஸ்யை தமிழக பணிக்கு மாற்றப்பட்டார்.

சூப்பர் திட்டம்.! மாணவர்களுக்கு 25ஆயிரம் ஊக்கத்தொகை.! விண்ணப்பிக்க அழைப்பு- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

கள்ளச்சாராய மரணம்- உள்துறை செயலாளர் மாற்றம்

தமிழகத்தில் தமிழக  ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் முதலமைச்சர் தலைமையின் கீழ் இயங்கும் உள்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் 65 பேர் பலி, அரசியல் தலைவர்கள் தொடர் கொலைகள் திமுக அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது உள்துறை செயலாளராக இருந்த அமுதாவும் மாற்றப்பட்டு அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு

இந்த நிலையில் அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதலாக முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியில் இருந்த அமுதா ஐஏஎஸ்யை கேட்டு வாங்கிய தமிழக அரசு! உள்துறையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டது ஏன்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios