Tamil Nadu Governor should withdraw Tamil Nadu Livelihood Party

கடலூர்

தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில், "காவிரி விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளின் போக்கைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது,

தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை மறுக்கும் விதமாகக் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது, 

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியைத் திரும்பவும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவது, 

தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவிரி டெல்டா பகுதிகளில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.