Tamil Nadu fishermen in the middle of the sea
சென்னை முனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளித்துத்துக் கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அவர்களை மீட்கும் வகையில் கடலோர காவல் படை அங்கு விரைந்துள்ளது.
சென்னை பதிவெண் கொண்ட படகில், கடலுக்குச் சென்ற மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதாக இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் இருந்து 98 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் தத்தளித்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
மீனவர்கள் சென்ற படகு என்ஜின் அறையில் தண்ணீர் புகுந்ததால், அபாய மணி ஒலித்தது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலில் தத்தளித்து வருவதாக இந்திய கடற்படை தகவல் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க கடலோர காவல் படை வீரர்கள் கடலுக்குள் விரைந்து சென்றுள்ளனர்.
