தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து செய்து காட்டியிருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது ஆட்சியின் மதிப்பீடு என்பது சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார். 

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து செய்து காட்டியிருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது ஆட்சியின் மதிப்பீடு என்பது சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.மாவட்ட ஆட்சியர்கள்- காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்த மாநாடு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தொடந்து 12 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை என தகவல்..

சட்ட ஒழுங்கு என்பது காவல்துறையினர் பணி மட்டுமல்ல. மேலும் இது ஒரு துறையை மட்டும் பாதிக்கக்கூடிய விஷியம் மட்டுமல்ல. நமது மாநிலத்துடைய மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையினர் உடைய கல்வி, வேலைவாய்ப்பு என சமுதாயத்தின் ஒவ்வொரு பரிணாமத்தை நிர்ணயக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் என அனைவரையும் நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்று தான் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்ட ஒழுங்கு தொடர்பாக மாதாந்திர கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த கூட்டங்கள் நடத்தபடவில்லை. என்வே இவை தற்போது மாற்றப்படவேண்டும். அதே போல், வாரந்தோறும் சட்ட ஒழுங்கு குறித்து நுண்ணறிவு பிரிவு குறித்து கலந்தாலோசிக்கபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையினர் மற்றும் ஆட்சியர் இணைந்து டஷ்போர்டு ஒன்றை உருவாக்கவேண்டும். அதில் சட்ட ஒழுங்கு கூட்டத்தில் அலோசித்து எடுக்கக்கூடிய முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை குறிப்பிட்டு , முழுமையான தீர்வு காணவேண்டும் என்று பேசினார்.

மேலும் படிக்க : முதல்வர் வரை சென்ற புகார்..ஒரே நாளில் அடித்து தூக்கப்பட்ட 313 பேர்.. அதிரடி உத்தரவு..

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை நிகழ்ந்தேறிய பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விட
அவை நடப்பதற்கு முன்பாக தடுப்பதற்கான நடவடிக்கைகளே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், நமது வெற்றி என்பது சட்ட ஒழுங்கு பிரச்சனை மக்களை பாதிக்காத வகையில் இருப்பது தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து பலமுறை நான் செய்தும் காட்டியிருக்கிறேன் என்று பேசிய முதலமைச்சர், ஆட்சியின் மதிப்பீடு என்பது சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் தான் இருக்கிறது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.