tamil farmers meets rajnath singh
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களுக்காக உத்தர பிரதேச மாநில விவசாயிகளும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
நெடுவாசல் விவசாயிகளுக்காவும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் பொருட்டும் உத்திர பிரதேச விவசாயிகளும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் கை கோர்த்தனர்.
இந்நிலையில், இத்தனை நாளாக செவி சாய்க்காத மத்திய அரசு , இன்றுதான் கொஞ்சம் கருணை காட்டியுள்ளது. அதாவது உங்களுக்கு என்னதான் பிரச்னை ..? என கேட்பதற்காக இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டது மத்திய அரசு.

இந்நிலையில், தற்போது போராட்ட களத்தில் உள்ள விவசாயிகளில், நான்கு பேர் மட்டும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர் .
தென்னிந்திய நதிகள் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு விவசாய பிரதிநிதிகளுடன் சென்று ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின், விவசாயிகளுக்கு தேவையான நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
