கரூர்,
தமிழர் உரிமையை நிலைநாட்டும் ஒரே இயக்கம் அதிமுக. தான் என்று வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு கரூர் கலங்கரை விளக்க முனையில் நடைப்பெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ, அவைத்தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
“மத்திய அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழகத்தில் கொண்டு வர நினைத்த முயற்சியை முறியடித்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் உலக தமிழ் மாநாட்டை நடத்தி காண்பித்தவர்கள். எம்.ஜி.ஆர். தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தையே உருவாக்கினார். எனவே தமிழர் உரிமையை நிலைநாட்டும் ஒரே இயக்கம் அதிமுக. தான்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், தென்னக இரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் திருவிக, தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
