Asianet News TamilAsianet News Tamil

#Breaking:அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரிக்க தடையில்லை.. உச்சநீதிமன்றம் உத்தரவு..

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஜ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

Supreme court order - Ariyalur student sucide case
Author
Tamil Nadu, First Published Feb 14, 2022, 1:00 PM IST

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஜ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி அவர் (வயது 17). விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். ஜனவரி 19ல் விஷம் குடித்து தற்கொலை செய்துவி்ட்டார். பள்ளி, விடுதி நிர்வாகம் சார்பில் கட்டமாய மதமாற்றத்துக்கு வலியுறுத்தப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.

இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினர் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தினர். மாணவியின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சிபிஐ விசாரணைக்கு ஜனவரி 31ல் உத்தரவிட்டார்.இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.,3ல் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் டிஜிபி சைலேந்திரபாபு மூலம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையே, வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கும் முன் தன்தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என மாணவியின் தந்தை கேவியட் மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஜி விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மாணவியின் தந்தைக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில்  4 வாரத்தில் பதிலளிக்க ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios