திருநெல்வேலி

சாதி வெறியால் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் வெட்டிக் கொலை செய்துள்ளான்.

வல்லநாடு படுகையூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் மதிதா இந்து பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார்.

அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் படுகையூரைச் சேர்ந்த தேவர் சாதி பிரிவை சார்ந்த மற்றொரு மானவருக்கும், வெங்கடேஷுக்கும் சில தினங்களுக்கு முன் சாதி ரீதியாக தகராறு ஏற்பட்டுள்ளது

இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து பலமுறை பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைக்கு தகவல் சென்றுள்ளது. இந்த நிலையில் 11-ஆம் வகுப்பு மானவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளான்.

அதன் பின் இன்று வெங்கடேஷ் தங்கியிருக்கும் ஆதிதிராவிடர் மானவர் விடுதிக்கு வந்து வெங்கடேஷை பேச வருமாறு அழைத்துள்ளான் அந்த 11-ஆம் வகுப்பு மாணவன்.

வெங்கடேஷும் சென்றுள்ளாஅன். ஆனால், விடுதியின் வாசலில் வைத்து வெங்கடேஷை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளான்.

நெல்லையில் தொடர்ந்து சாதிய கொலைகள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நொச்சிக்குளம் முருகன் என்ற மாணவன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து இன்று மற்றொரு பள்ளி மானவர் வெங்கடேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் சாதிய கொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது.

இப்படியே போனால், நெல்லை வாழ்வதற்கு பாதுகாப்பற்ற ஊர் என்ற பெயர் பெற்றுவிடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும்.

“சாதிய மோதல்கள் இல்லை என்றும் ஆணவ கொலை ஏதும் நடக்கவில்லை என்றும் கூறுகிறது தமிழக அரசு. மேலும், அவை அனைத்தும் தனி நபர் மோதல் என்று சொல்லி தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்று போலியானத் தோற்றத்தை மக்களிடையே ஒருபுறம் ஏற்படுத்துகிறது.

மறுபுறம் இதுபோன்ற சாதிய, ஆணவக் கொலைகளுக்கு கதவைத் திறந்து ஆதரவளிக்கும் விதமாக இருக்கிறது.” என்றும் சிட்டிசன் மற்றும் நெட்டிசன்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளது தமிழக அரசு…