Asianet News TamilAsianet News Tamil

அரசு கலை கல்லூரிகளில் சேர்க்கை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. உயர்கல்வித்துறை புது அறிவிப்பு..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் . ஏற்கனவே 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 22ம் தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. 

Student Admission in Government Arts Colleges - Will Apply from today to July 7th
Author
Tamilnádu, First Published Jun 22, 2022, 11:02 AM IST

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் . ஏற்கனவே 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 22ம் தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஆன்லைன் மூலமாக www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12 ம் வகுப்பில் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 12 ஆம் வகுப்பில் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 7,499 மேல்நிலைப் பள்ளிகளில், 2,628 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 246 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் சேர, இன்று முதல்( ஜூன் 22) ஜூலை 7ம் தேதி வரை  www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:சென்னை மக்களே உஷார்.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு திடீர் அதிகரிப்பு.. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Follow Us:
Download App:
  • android
  • ios