Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கவேப்படாது! அடித்து சொல்கிறார் மாவட்ட ஆட்சியர்!

ஸ்டெர்லைட் ஆலை திறக்கவேப்படாது என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Sterlite will never be reopened! District Collector information

ஸ்டெர்லைட் ஆலை திறக்கவேப்படாது என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மே மாதம் மூடப்பட்டது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. Sterlite will never be reopened! District Collector information

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. ஆனால் நிரந்தர பணியாளர்களை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான மறைமுகமான முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என தகவலும் வெளியாகியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கழிவுகள் வெளியானதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆலையில் ரசாயன கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 99 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Sterlite will never be reopened! District Collector information

இதுவரை ஸ்டெர்லைட்டில் இருந்து இதுவரை 46,000 டன் ஜிப்சம் மற்றும் 33,000 டன் ராக் பாஸ்பேட் அகற்றப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பாஸ்போரிக், கந்த அமிலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. ஆலையில் எஞ்சியுள்ள ராக், பாஸ்பேட், காப்பர் மணலை அகற்ற 30 நாள் ஆகும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற தகவல் முற்றிலுமாக பொய்யானது. தமிழக அரசின் முடிவின்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios