தூத்துக்குடி ஆலை, பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் மற்றும் அரசிடம் இருந்து உத்தரவைப் பெற்று ஆலை மீண்டும் திறக்கப்படும் என ஆலையின் நிறுவனர் அனில் அகர்வால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 தூத்துக்குடி பிரச்சனையில் 13 உயிர்களை பலி வாங்கி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கு தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், அணில் அகர்வால், ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசி உள்ளார். அதில்  மீண்டும்  ஸ்டெர்லைட்  ஆலை செயல்பட டி மகளின் ஆதரவு வேண்டும் என்றும், கோர்ட் தீர்ப்புக்காகவும்  தான் காத்திருப்பதாக தெரிவித்து  உள்ளார். 

 ஏற்கனவே பெரும்  துயரத்தில் இருக்கும் தமிழர்களின் உணர்வுகளில் எரியும் நெருப்பில்  எண்ணெய் ஊற்றுவது போல் பேசி  உள்ளார்  நிறுவனர் அணில் அகர்வால்.