state government clarify go regarding jallikattu on madurai court

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக இந்த வருடம் அரசாணை வெளியிடப் படாமல் நடந்தது சட்ட விரோதம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதற்கு, மாநில அரசு பதிலளித்துள்ளது. 

நடப்பாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு ஜனவரி 12 ஆம் தேதி அரசிதழில் அனுமதி பிறப்பித்துள்ளது. 

ஜல்லிக்கட்டு நடத்த 2018ஆம் ஆண்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, மதுரையில் மூன்று இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாகக் கருதலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியிருந்தது. 

அரசாணை வெளியிடாமல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாகக் கருதலாம் என்றும் 2018ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசாணை வெளியிடவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

இதனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாகக் கருதலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியதால் காலை முதல் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ளது மாநில அரசு.

பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.